ஹெல்மெட் அணியாததால் துணை நடிகருக்கு அபராதம் : விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு அசத்தல்

ஹெல்மெட் அணியாததால், அபராதம் விதிக்கப்பட்ட துணை நடிகர் திருச்சி ரமேஷ், போலீசார் அறிவுரைபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஹெல்மெட் அணியாததால் துணை நடிகருக்கு அபராதம் : விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு அசத்தல்
x
ஹெல்மெட் அணியாததால், அபராதம் விதிக்கப்பட்ட துணை நடிகர் திருச்சி ரமேஷ், போலீசார் அறிவுரைபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மெர்சல், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் லால்குடியை சேர்ந்த துணை நடிகர் திருச்சி ரமேஷ். கடந்த 28 ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற திருச்சி ரமேஷூ​க்கு, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அபராதம் விதித்தனர். அபராத தொகையை செலுத்திய திருச்சி ரமேஷ், போலீசார் விடுத்த கோரிக்கையை ஏற்று, இந்த வீடியோ பதிவை வெளியிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்