"முதல் 3 வளரும் நாடுகள் பட்டியலில் இந்தியா" - சென்னை ​ஹேக்கத்தான் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

சென்னை ஐஐடி-யில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, முதல் 3 வளரும் நாடுகள் பட்டியலில் இந்தியா உள்ளதாக கூறினார்.
முதல் 3 வளரும் நாடுகள் பட்டியலில் இந்தியா - சென்னை ​ஹேக்கத்தான் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
x
சென்னைக்கு ஒரு நாள் சுற்றுப்பயணமாக வந்த பிரதமர் மோடி, ஐஐடியில் நடைபெற்ற ஹேக்கத்தான் நிகழ்ச்சியில் பங்கேற்று பரிசுகளை வழங்கினார். போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற சிங்கப்பூர் மற்றும் இந்திய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில், சிங்கப்பூர் கல்வி அமைச்சர், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் பேசிய பிரதமர் மோடி, போட்டியில் வெற்றி பெறுவதை விட திறமைகள் வெளிப்படுவதையே முக்கியமான விஷயமாக பார்ப்பதாக கூறினார். மேலும், போட்டியில் பங்கேற்கும் அனைவருமே வெற்றியாளர்கள் தான் என கூறிய பிரதமர் மோடி, ஹேக்கத்தான் போட்டி மூலமாக இந்தியா, சிங்கப்பூர் நாடுகள் இணைந்து அடுத்தகட்ட ஆராய்ச்சிக்கு செல்லும் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், இந்தியாவை பொறுத்தவரை முதல் மூன்று வளரும் நாடுகள் பட்டியலில் உள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்