குழந்தைகள் மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில், காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான சிறப்பு வார்டை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
குழந்தைகள் மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு
x
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில், காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான சிறப்பு வார்டை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  திடீர் ஆய்வு மேற்கொண்டார். சிறப்பு வார்டில் 158 குழந்தைகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களில் 31 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது. இதனிடையே நேற்றிரவு அங்கு ஆய்வில் ஈடுபட்ட அமைச்சர் விஜயபாஸ்கர், ரத்த தட்டணுக்களை கண்டறியும் கருவியின் செயல்பாடு குறித்தும், குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.


Next Story

மேலும் செய்திகள்