அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி? - பணம் வாங்கியவரை காரில் கடத்திய 7 பேர் கும்பல்

திருச்சியில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததாக, இந்து மகா சபா நிர்வாகியை கடத்திய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி? - பணம் வாங்கியவரை காரில் கடத்திய 7 பேர் கும்பல்
x
தஞ்சை மாவட்டம் பூதலூரை சேர்ந்தவர் இந்து மகா சபா செயலாளர் இளையராஜா. இவர் அரசு  வேலை வாங்கித் தருவதாக கூறி நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர் மன்ற பெரம்பலூர் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் என்பவரிடம் 5 லட்சம் ரூபாய் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் உறுதி அளித்தவாறு வேலை வாங்கி தராததால் காந்தி மார்க்கெட்டில் நின்று கொண்டிருந்த இளையராஜாவை  செந்தில்குமார் உள்ளிட்ட 7 பேர் காரில் கடத்தி சென்றுள்ளனர். இதுதொடர்பாக பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் காரை விரட்டி சென்ற போலீசார் திருவானைக்காவலில் அருகே இளையராஜாவை மீட்டனர். இதனையடுத்து செந்தில் குமார் உள்ளிட்ட  அனைவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, இளையராஜாவிற்கும் அகில பாரத இந்து மகா சபாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என மாநில தலைவர் கல்கி ராஜசேகர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்