மருத்துவப் படிப்பு சேர்க்கை முறைகேடு விவகாரம் : சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்

மருத்துவப் படிப்பு சேர்க்கை முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மருத்துவப் படிப்பு சேர்க்கை முறைகேடு விவகாரம் : சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்
x
மருத்துவப் படிப்பு சேர்க்கை முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத், இந்த முறைகேட்டில் மும்பை உள்ளிட்ட இடங்களில் உள்ளவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கருதப்படும் நிலையில், முறைகேடு குறித்து முழுமையாக விசாரிப்பதற்கு சி.பி.ஐ. விசாரணை அவசியம் என தெரிவித்தார். தமிழகத்தில் 2017, 2018 மற்றும் நடப்பாண்டு என 3 ஆண்டுகளில் நடந்த மாணவர் சேர்க்கை விபரங்களை, ஆவணங்களை சரி பார்ப்பதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்  வலியுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்