நிலம் கையகப்படுத்தும் சட்டம் ரத்து தொடர்பான வழக்கு : உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

2015ஆம் ஆண்டு தமிழக அரசு கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
நிலம் கையகப்படுத்தும் சட்டம் ரத்து தொடர்பான வழக்கு : உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
x
நிலம் கையகப்படுத்தல் தொடர்பாக 2015 ஆம் ஆண்டு தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த சட்டத்தின் கீழ் 2013க்கு பின் மேற்கொள்ளப்பட்ட நிலம் கையெடுப்பு நடவடிக்கைகளை ரத்து செய்தது. அந்த உத்தரவை எதிர்த்த தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கான்வில்கர், தினேஷ் மகேஸ்வரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த தடை உத்தரவால் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள் முடங்கியுள்தாக தமிழக அரசு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அப்போது எதிர்மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன், நிலம் கையகப்படுத்தும் தமிழக அரசின் சட்டத்தால், 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டு, தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் இது விவசாயத்தை முழுவதுமாக அழிக்கும் செயலாகும் என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டம் 2015ஐ ரத்து செய்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர். ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டு உள்ள நிலங்களில் தற்போது நடைபெறும் திட்டங்கள் தொடர அனுமதி அளித்த நீதிபதிகள், அனைத்து உத்தரவுகளும் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டதே என கூறி, வழக்கு விசாரணையை நவம்பர் 3வது வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்