நாங்குநேரி - விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : செப்.30-ல் அதிமுக வேட்பாளர்கள் மனுத்தாக்கல்

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள், வருகிற 30ம் தேதி, வேட்புமனு தாக்கல் செய்கிறார்கள்.
நாங்குநேரி - விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : செப்.30-ல் அதிமுக வேட்பாளர்கள் மனுத்தாக்கல்
x
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள், வருகிற 30ம் தேதி, வேட்புமனு தாக்கல் செய்கிறார்கள். நாங்குநேரி தொகுதியில் ரெட்டியார்பட்டி நாராயணனும், விக்கிரவாண்டி தொகுதியில் முத்தமிழ்ச்செல்வனும் களமிறங்கி உள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 30ம் தேதி தான் கடைசி நாள் என்பதால், திமுக வேட்பாளர்களும் அதற்கு முன்பே, வேட்பு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை, அக்டோபர் 1ம் தேதியும், வாபஸ் பெற, அக்டோபர் 3ம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, அக்டோபர் 3ம் தேதி மாலையில், இவ்விரு தொகுதிகளிலும் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல், அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.


Next Story

மேலும் செய்திகள்