மூடப்பட்ட டெல் தொழிற்சாலை - விரைவில் திறப்பு

வேலூர் மாவட்டம், காட்பாடியில் இயங்​​கி வந்த தமிழ்நாடு வெடிமருந்து தொழிற்சாலை நஷ்டத்தில் ஓடுவதாக கூறி, இரண்டு ஆண்டுக்கு முன்பு மூடப்பட்டது.
மூடப்பட்ட டெல் தொழிற்சாலை - விரைவில் திறப்பு
x
வேலூர் மாவட்டம், காட்பாடியில் இயங்​​கி வந்த தமிழ்நாடு வெடிமருந்து தொழிற்சாலை நஷ்டத்தில் ஓடுவதாக கூறி, இரண்டு ஆண்டுக்கு முன்பு மூடப்பட்டது. அந்த நிறுவனத்தை மீண்டும் துவக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி, முதலமைச்சர் விடுத்த அழைப்பை ஏற்று, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நவரத்தின அந்தஸ்து நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், 50 கோடி ரூபாய் மதிப்பில், ஆலையை புனரமைத்து உற்பத்தியை துவங்க உள்ளது. 320 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் உள்ள ஏராளமானோருக்கு வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், ஆலையை மீண்டும் துவக்க முயற்சி எடுத்த முதலமைச்சருக்கு, முன்னாள் தொழிலாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்