குரூப் 2 தேர்வுக்கான பாடத்திட்டம் மாற்றம் : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

குரூப் 2 தேர்வுக்கான பாடத் திட்டங்களை மாற்றி அமைத்து, புதிய பாடத் திட்டத்தினை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
குரூப் 2 தேர்வுக்கான பாடத்திட்டம் மாற்றம் : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு
x
அதன்படி, குரூப் 2 மற்றும் குரூப் 2-ஏ ஆகிய இரு பதவிகளுக்கும் இனி ஒரே தேர்வாக, முதனிலை மற்றும் முதன்மை எழுத்து தேர்வு கொண்டவையாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மேலும், முதனிலை தேர்வில் இதுவரை கேட்கப்பட்டு வந்த பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் தேர்வுகள் நீக்கப்பட்டு, 2-ஆம் கட்டமாக நடைபெறும் முதன்மை தேர்வுக்கு, கூடுதல் முக்கியத்துவத்துடன் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று முதல்நிலை தேர்வில், பொது அறிவுத்தாள் தேர்வாக இருந்தாலும், அதில் தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாடு, சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு, சமுதாய மறுமலர்ச்சி இயக்கங்கள், திருக்குறள் உள்ளிட்ட, பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், மொழி பாட தேர்வுகளை, விரிவாக விடையளிக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளதாகவும் டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்