கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய டிப்பர் லாரி

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி, அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய டிப்பர் லாரி
x
கண்டரக்கோட்டை பெண்ணையாற்று அரசு மணல் குவாரியிலிந்து மணல் ஏற்றிய ஒரு டிப்பர் லாரி,  பண்ருட்டி நான்கு முனை சந்திப்பு ரயில்வே மேம்பாலத்திலிருந்து கீழே இறங்கியது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிரே வந்த கூலித்தொழிலாளி மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் எதிரில் வந்த கார் மீது மோதியது.இதில்  கார் லாரியில் சிக்கியபடியே இழுத்து செல்லப்பட்டது. மேலும் சிக்னலுக்காக காத்திருந்த  இரு சக்கர வாகனங்கள் மீதும் லாரி  மோதியது. இதில் 4 பேர் காயம் அடைந்தனர். பின்னர் லாரி நின்றதும் பொதுமக்கள் உதவியுடன் காரில் சிக்கி இருந்த ஓட்டுனர் காமராஜ் மீட்கப்பட்டார். 

Next Story

மேலும் செய்திகள்