"மக்களிடம் கட்டாய வரி வசூல் செய்தால் நடவடிக்கை" - அமைச்சர் வேலுமணி எச்சரிக்கை

உள்ளாட்சி வரி உயர்வு மறு சீரமைப்பு செய்யப்படுவதற்கு முன்பாக மக்களை வற்புறுத்தி, கட்டாய வரி வசூல் செய்தால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி எச்சரித்துள்ளார்.
x
உள்ளாட்சி வரி உயர்வு மறு சீரமைப்பு செய்யப்படுவதற்கு முன்பாக மக்களை வற்புறுத்தி, கட்டாய வரி வசூல் செய்தால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி எச்சரித்துள்ளார். திருச்சியில் மழை நீர் சேகரிப்பு, நீர் நிலைகள் புனரமைப்பு பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் காமராஜ், சி.விஜயபாஸ்கர், துரைக்கண்ணு, எம்.ஆர். விஜயபாஸ்கர்,  வெல்லமண்டி நடராஜன், வளர்மதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி, இந்த எச்சரிக்கையை விடுத்தார்

Next Story

மேலும் செய்திகள்