தடை செய்யப்பட்ட பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம் : இந்து முன்னணியை சேர்ந்த 30 பேர் கைது

சென்னையில் தடை செய்யப்பட்ட பகுதி வழியாக விநாயகர் சிலை ஊர்வலம் செல்ல முயன்ற இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.
தடை செய்யப்பட்ட பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம் : இந்து முன்னணியை சேர்ந்த 30 பேர் கைது
x
விநாயகர் சதுர்த்தியையொட்டி, சென்னையில் மட்டும் 2 ஆயிரத்து 642 சிலைகளை இந்து அமைப்பினர் வைத்திருந்தனர். அந்த சிலைகள், சென்னையில் எண்ணூர்,  பாலவாக்கம்,  பட்டினப்பாக்கம், திருவெற்றியூர், காசிமேடு கடல் பகுதிகளில்  கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டன. மாலை 4 மணிக்கு மேல் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் முற்றிலுமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டு விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது. சென்னை திருவல்லிக்கேணி ரத்னா கபே சந்திப்பில் இருந்து பாரதி சாலை வழியாக ஊர்வலம் திருப்பி அனுப்பப்பட்டன. ரத்னா கபே சந்திப்பில்  இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு பதற்றமான பகுதி என்பதால் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இந்த தடை செய்யப்பட்ட பகுதி வழியாக விநாயகர் சிலையை எடுத்து செல்ல முயன்ற இந்து முன்னணி தலைவர்கள் உள்ளிட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்