கடைகள் முன்பு வேலி - வியாபாரிகள் எதிர்ப்பு

தஞ்சை பேருந்து நிலையத்தில் கடைகள் முன்பு கட்டப்பட்டுள்ள வேலிகளை அகற்றக் கோரி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி கொண்டிருந்த போது, பேருந்து ஒன்று பெண் மீது மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடைகள் முன்பு வேலி - வியாபாரிகள் எதிர்ப்பு
x
தஞ்சை பேருந்து நிலையத்தில் கடைகள் முன்பு கட்டப்பட்டுள்ள வேலிகளை அகற்றக் கோரி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி கொண்டிருந்த போது, பேருந்து ஒன்று பெண் மீது மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தஞ்சை பழைய பேருந்து நிலையம் மேம்படுத்தப்பட உள்ளதால், இங்குள்ள கடைகள் முன்பு மாநகராட்சி சார்பில் வேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேலியை அகற்றக் கோரி வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த பெண் ஒருவர் மீது அரசு பேருந்து மோதியதில் அவரது காலில் முறிவு ஏற்பட்டது. இதனால் தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்