தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் கரைப்பு

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் கரைப்பு
x
சென்னையில் உள்ள திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்ட 356 விநாயகர் சிலைகள், ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த படகுகளில் கொண்டு சென்று நடுக்கடலில் கரைக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த 128 விநாயகர் சிலைகள் மிடாலம் கடற்பகுதிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது.

ஒசூரில் வைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. இதற்காக ஆயிரத்து  500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தூத்துக்குடியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்ட 70க்கும் மேற்பட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு  திரேஸ்புரம் சங்குமுக கடற்கரையில்  கரைக்கப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்