இன்று மாலை பேராலய திருவிழா கொடியேற்றம் : வேளாங்கண்ணியில் குவிந்து வரும் பக்தர்கள்

உலகக் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா கோயில் பேராலய திருவிழா, இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இன்று மாலை பேராலய திருவிழா கொடியேற்றம் : வேளாங்கண்ணியில் குவிந்து வரும் பக்தர்கள்
x
இன்று முதல் செப்டம்பர் 8ஆம் தேதி விழா நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்வான தேரோட்டம், செப்டம்பர் 7ஆம் தேதி நடைபெறுகிறது. தஞ்சாவூர் மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில், மாதா உருவம் பொறித்த பேராலாய கொடி ஏற்றப்பட உள்ளது. கொடியேற்றத்தைக் காண வெளிநாடு மற்றும், இந்தியாவில் உள்ள மும்பை, கோவா, கர்நாடகா, ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட பக்தர்கள் குவிந்து வருகின்றனர். வேளாங்கண்ணி கடற்கரை பகுதியில் பக்தர்கள் கடலில் குளிக்கும்போது அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருக்க அதிவேக படகு மற்றும் உயிர்காக்கும் கவசத்துடன் கடற்கரையில் காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். தீவிரவாத அச்சுறுத்தலின் எதிரொலியாக, வேளாங்கண்ணியில் 2 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  


Next Story

மேலும் செய்திகள்