ஆளுநரின் தனிச்செயலர் வருகைக்கு எதிர்ப்பு : தனிச் செயலர் ராஜகோபாலின் கூட்டம் ரத்து

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் நடைபெற இருந்த, தமிழக ஆளுநரின் தனிச்செயலாளர் ராஜகோபால் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது.
ஆளுநரின் தனிச்செயலர் வருகைக்கு எதிர்ப்பு : தனிச் செயலர் ராஜகோபாலின் கூட்டம் ரத்து
x
பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் பதிவாளர் கோபிநாத் கணபதி, பேராசிரியர், விரிவுரையாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பினார். அதில், தமிழக ஆளுநரின் தனிச்செயலர் ராஜகோபால், இன்று மாலை வர இருப்பதாகவும், பேராசிரியர்கள் கண்ணியமான உடை அணிந்து வர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டிருந்தார். சுற்றறிக்கையை பார்த்து அதிர்ச்சி அடைந்த பேராசிரியர்கள், ராஜகோபால் வருகைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விதிமுறைகளுக்கு மாறாக பல்கலைக் கழகத்தில் ஆளுநரின் தனிச்செயலர் கூட்டம் நடத்துவதாக அவர்கள் குற்றம்சாட்டினர். இதனிடையே, ஆளுநரின் தனிச்செயலர் ராஜகோபால் வருகை திடீரென ரத்து செய்யப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்