ரயில் பயணிகளிடம் திருடுபோன தங்க நகைகள் : 257 தங்க நகைகள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

கடந்த 2 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் ரயில் பயணிகளிடம் இருந்து திருடப்பட்ட 257 சவரன் தங்க நகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள், அதன் உரிமையாளர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டன.
ரயில் பயணிகளிடம் திருடுபோன தங்க நகைகள் : 257 தங்க நகைகள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
x
கடந்த 2 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் ரயில் பயணிகளிடம் இருந்து திருடப்பட்ட 257 சவரன் தங்க நகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள், அதன் உரிமையாளர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் ரயில் பயணிகளிடம் திருடப்பட்ட பல்வேறு பொருட்களை மீட்டு, அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற ரயில்வே ஐஜி வனிதா,  நகைகள் மற்றும் பொருட்களை அதன் உரிமையாளர்களிடம் வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஐஜி வனிதா, துரிதமாக செயல்பட்டு நகை மற்றும் பொருட்களை மீட்டதாகவும், முக்கிய கொள்ளையர்களை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்