விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு : பயணிகள் கடும் அவதி

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து அகமதாபாத், கோவா சென்ற விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு : பயணிகள் கடும் அவதி
x
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு  முனையத்தில் இருந்து அகமதாபாத், கோவா சென்ற விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயணிகள் கடும் அவதியடைந்தனர். 155 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் கொண்ட இந்த விமானத்தை விமானி ஓடுபாதைக்கு கொண்டு வந்தார். அப்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை கண்டுபிடித்ததை அடுத்து, சரி செய்யப்பட்டு விமானம் புறப்பட்டது. இதே போல சென்னையில் இருந்து கோவா சென்ற விமானத்தில் 60 பேர் பயணம் செய்தனர். இந்த விமானமும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயணிகள் 
ஓவறையில் தங்க வைக்கப்பட்டு சுமார் 8 மணி நேர தாமதத்திற்கு பின் வேறு விமானத்தில் சென்றனர். 


Next Story

மேலும் செய்திகள்