நெல்லையை கலக்கிய கொள்ளை கும்பல் : பூட்டிய வீடுகளை குறிவைத்து கொள்ளை

நெல்லை மாவட்டத்தை கலக்கிய கொள்ளையர், போலீசார் வசம் சிக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ தங்கம்,500 கிராம் வெள்ளி 3 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
நெல்லையை கலக்கிய கொள்ளை கும்பல் : பூட்டிய வீடுகளை குறிவைத்து கொள்ளை
x
நெல்லை மாவட்டத்தில் இருக்கக்கூடிய பல்வேறு பகுதிகளில் பூட்டிய வீடுகளில் அரங்கேறும் கொள்ளைச்சம்பவங்கள் கடந்த ஆறு மாத காலமாக அதிகரித்து வந்தன. இந்த சம்பவத்தில்,  சேர்ம துரை என்ற பெயரில் இருவரும்,  பாலகிருஷ்ணன்,  மற்றும் சுயம்பு லிங்கம் ஆகிய நான்கு பேர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து சுமார் 2 கிலோ தங்கம், 500 கிராம் வெள்ளி பொருட்கள், கொள்ளைக்கு பயன்படுத்திய 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.  இந்த கொள்ளை சம்பவம் குறித்து பணகுடி காவல் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த உதவி காவல் கண்காணிப்பாளர் ஹரிஹரன் பிரசாத், பூட்டிய வீடுகளை கண்காணிப்பதற்கென்று காவல்துறையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் அதனை பயன்படுத்துவதில்லை என்றும் வருத்தம் தெரிவித்தார்.  


Next Story

மேலும் செய்திகள்