உடற்கல்விக்கு முக்கியத்துவம் இல்லை - புதிய கல்விக்கொள்கை குறித்து கருத்து

புதிய கல்வி கொள்கையில் உடற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையென தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்கள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
உடற்கல்விக்கு முக்கியத்துவம் இல்லை - புதிய கல்விக்கொள்கை குறித்து கருத்து
x
தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம், சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மாநிலத் தலைவர் சங்கர பெருமாள், அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். இதுதொடர்பாக அரசு அழைத்து பேசாவிட்டால் அக்டோபர் முதல் வாரத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும், மாநில விளையாட்டு போட்டிகளை புறக்கணிக்க இருப்பதாகவும் கூறினார்.  மேலும், புதிய கல்வி கொள்கையில் உடற்கல்விக்கு முக்கியத்துவம் ஏதும் கொடுக்கவில்லை என்றும், தமது கண்டனத்தை அவர் பதிவு செய்தார்.

Next Story

மேலும் செய்திகள்