கால்டாக்சி டிரைவர் மீது சரமாரி தாக்குதல் - பணம், செல்போனை பறித்துச் சென்ற இளைஞர்கள்

சென்னை கோயம்பேடு அருகே கால் டாக்சி டிரைவரை தாக்கி பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கால்டாக்சி டிரைவர் மீது சரமாரி தாக்குதல் - பணம், செல்போனை பறித்துச் சென்ற இளைஞர்கள்
x
சென்னை கோயம்பேடு அருகே கால் டாக்சி டிரைவரை தாக்கி பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எம்.எம்.டி.ஏ பகுதியில், தமிழ்ச்செல்வன் என்பவர் கால்டாக்சி ஓட்டி வந்த போது, 2 இளைஞர்கள் அவரை சவாரிக்கு அழைத்துள்ளனர்.  ஆனால், செல்போன் மூலம் பதிவு செய்தால் மட்டுமே, சவாரி ஏற்கப்படும் என்று தமிழ்ச்செல்வன் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், தமிழ்ச்செல்வனை வழிமறித்து தாக்கியதுடன் அவரிடம் இருந்த 4 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் செல்போனை பறித்துச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக தமிழ்ச்செல்வன் அளித்த புகாரின் அடிப்படையில், கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நடுரோட்டில் பலபேர் கண்முன்னே நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்