பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் தீ விபத்து : காவல் நிலையங்களில் தொலைபேசி துண்டிப்பு

சென்னை மண்ணடியில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் தொலைத் தொடர்பு இணைப்பு கருவிகள் எரிந்து நாசமானது.
பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் தீ விபத்து : காவல் நிலையங்களில் தொலைபேசி துண்டிப்பு
x
சென்னை மண்ணடியில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் தொலைத் தொடர்பு இணைப்பு கருவிகள் எரிந்து நாசமானது. இதன் காரணமாக சென்னையில் பல இடங்களில் தரைவழி தொலைபேசி இணைப்புகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை கமிஷனர் அலுவலகம் மட்டுமின்றி, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், தி நகர், உள்ளிட்ட பல பகுதிகளில் காவல் நிலையங்களில் உள்ள தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. இந்தப் பிரச்சனை சரியாக இன்னும் சில தினங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது. அவசர அழைப்பு எண் 100 மட்டும் பயன்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்