கோலாகலமாக நடைபெற்ற ஆடி தேரோட்டம் : தேரின் வடம் அறுந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி

புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் கோகிலேஸ்வரர் கோவிலில் ஆடி தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
கோலாகலமாக நடைபெற்ற ஆடி தேரோட்டம் : தேரின் வடம் அறுந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி
x
புதுக்கோட்டை மாவட்டம்  திருக்கோகர்ணம் கோகிலேஸ்வரர் கோவிலில்
ஆடி தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது தேரின் வடம் திடீரென அறுந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து
சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பின்னர் மீண்டும் தேரோட்டம் நடைபெற்றது.
சிதிலம் அடைந்துள்ள கோவில் கோபுரம் மற்றும் பழமையான தேர் ஆகியவற்றை அறநிலையத்துறை முறையாக பராமரிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்