உச்சத்தைத் தொட்டது தங்கம் விலை : ஒரே நாளில் சவரனுக்கு ரூ.500 விலை உயர்வு

தங்கத்தின் விலை சமீபத்தில் இல்லாத உச்சமாக ,கிராமுக்கு 62 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு 26 ஆயிரத்து 976 ரூபாய் என்கிற உச்சத்தை எட்டியுள்ளது.
உச்சத்தைத் தொட்டது தங்கம் விலை : ஒரே நாளில் சவரனுக்கு ரூ.500 விலை உயர்வு
x
தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வந்த ஆபரண தங்கம் விலை நேற்று 26 ஆயிரத்து 480 ரூபாயாக குறைந்த நிலையில், இன்று ஒரே நாளில் 496 ரூபாய் அதிகரித்துள்ளது. அமெரிக்க மத்திய வங்கி 10 ஆண்டுகளுக்கு பின்னர் வட்டிக் குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டதன் தாக்கம் நேற்று சர்வதேச சந்தைகளில் எதிரொலித்தது. இந்நிலையில், இன்று இந்திய சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. உலக அளவில் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளதால் ஆபரண தங்கத்தின் விலை இந்தியாவில் உயர்ந்துள்ளது. தொடர்ச்சியாக பண்டிகை காலம் என்பதால் இந்தியாவில் ஆபரண தங்கத்தின் விலை குறைய வாய்ப்பில்லை என்று தங்க  நகை வர்த்தகர்கள் கூறியுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்