சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் திருவிழா - மலைப்பகுதியில் அன்னதானம் வழங்க தடை

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு, மலைப்பகுதியில் அன்னதானம் வழங்க கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் திருவிழா - மலைப்பகுதியில் அன்னதானம் வழங்க தடை
x
ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழியைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்திருளப்பன் தொடர்ந்த வழக்கிலேயே உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கோயில் பகுதியில் இருந்த மடங்களை மூடப்பட்டதால், பக்தர்களுக்கு அண்ணதானம் வழங்கப்படுவதில்லை என்றும், கோயிலில அடிப்படை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன், புகழேந்தி அடங்கிய அமர்வு, கோயில் மலைப்பகுதியில் அண்ணதானம் வழங்க கூடாது என்று உத்தரவிட்டார்.  அதற்கு பதில், சதுரகிரி மலை அடிவாரத்தில் உள்ள தாணிப்பாறை பகுதியில் அன்னதானம் வழங்கலாம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்