அத்திவரதர் உற்சவம் - நடிகர் உள்ளிட்ட பிரபலங்கள் தரிசனம்

அத்திவரதர் உற்சவத்தின் 25ஆம் நாளான இன்று, பிரபலங்கள் பலரும் சாமி தரிசனம் செய்தனர்.
அத்திவரதர் உற்சவம் - நடிகர் உள்ளிட்ட பிரபலங்கள் தரிசனம்
x
அத்திவரதர் உற்சவத்தின் 25ஆம் நாளான இன்று, பிரபலங்கள் பலரும் சாமி தரிசனம் செய்தனர். காஞ்சிபுரத்திற்கு வந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வந்து அத்தி வரதருக்கு பட்டாடை மற்றும் மலர் மாலை சமர்ப்பித்து  சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டார். அவரது வருகையையொட்டி கோயில் வளாகத்தில் போலீசாரின் பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்தப்பட்டது. மேலும், வி.ஐ.பி.க்கள் வரிசையில் வந்து, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், நகைச்சுவை நடிகர் ஆர்.ஜே.பாலாஜி மற்றும் ஐசரி கணேஷ் உள்ளிட்டோரும் அத்திவரதரை இன்று தரிசித்தனர். சாதாரணமாகவே அத்திவரதரை தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதும் நிலையில், பிரபலங்கள் வருகையால், காஞ்சிபுரம் களைகட்டியது.

Next Story

மேலும் செய்திகள்