வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் : 31 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு - மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்

வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் போட்டியிடும் 31 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் : 31 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு - மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்
x
வேலூர் மக்களவை தொகுதியில் கடந்த 11 ம் தேதி துவக்கிய வேட்பு மனுத்தாக்கலானது நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. இதன் மீதான பரிசீலனை காலை துவங்கி நடைபெற்று வந்தது. மனு பரீசீலனை நிறைவடைந்தவுடன் மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான சண்முகசுந்தரம் செய்தியாளர்களை சந்தித்தார். மொத்தமாக 43 வேட்பாளர்கள் 50 வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்ததாகவும், அதில்19 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் மொத்தம் 31 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் குறித்த கேள்விக்கு, தேர்தல் ஆணையம் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள தகுதி நீக்கம் செய்தோரின் பட்டியலில் அவர் பெயர் இல்லை என்பதால் மனுவை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்