முல்லை பெரியாறு அணையில் ஆய்வு : தமிழக அதிகாரிகளும் ஆய்வில் பங்கேற்பு
பதிவு : ஜூலை 10, 2019, 06:09 PM
முல்லை பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் தலைமையில் துணைக் கண்காணிப்பு குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
முல்லைப்பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க உச்சநீதி மன்றம் நியமித்த மூவர் குழுவிற்கு உதவியாக துணை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. அதன் புதிய தலைவராக மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணக்குமார் நியக்கப்பட்டுள்ளார். அவர் தலைமையில் துணைக் கண்காணிப்பு குழுவினர் முல்லை பெரியாறு  அணையில் ஆய்வு மேற்கொண்டனர். தமிழக பிரதிநிகளாக பெரியாறு சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் சுப்பிரமணி, உதவி செயற்பொறியாளர் சாம் இர்வின் உள்ளிட்டோர் ஆய்வில் பங்கேற்றனர்.  இரண்டு மாதங்களுக்கு பின் அணையை ஆய்வு செய்யும் இக்குழுவினர் தேக்கடியில் உள்ள படகுத்துறை வழியாக சென்றனர்.  பெரியாறு மெயின் அணை, பேபி அணை, கேலரிப்பகுதி, மதகுப்பகுதி உள்ளிட்டவற்றை  அவர்கள் நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் இக்குழுவினர் குமுளியிலுள்ள அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1656 views

பிற செய்திகள்

பாலாற்றில் உள்ள தடுப்பணைகளை உயர்த்தும் ஆந்திர அரசை எச்சரிக்க வேண்டும் - ராமதாஸ்

பாலாற்றின் குறுக்கே சட்டவிரோதமாக 21 தடுப்பணைகளை கட்டியுள்ள ஆந்திர அரசு, இப்போது அவற்றின் உயரத்தை அதிகரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

13 views

பாலாற்றில் உள்ள அணைகளை உயர்த்தும் ஆந்திர அரசு : தடுத்து நிறுத்த தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்ணையை உயர்த்தும் பணியில் ஆந்திர அரசு ஈடுபட்டுள்ளதால் திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்டங்கள் பாலைவனம் ஆகும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

9 views

கடலூர், நாகையில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி...

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் சார்பில் பல ஊர்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

12 views

கஜா புயல் - மறியலில் ஈடுபட்ட 140 பேர் மீதான வழக்கு ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கஜா புயலின் போது நிவாரணம் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டதாக 140 பேர் மீது தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

10 views

தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமனத்திற்கு, உயர்நீதிமன்றம் விதித்த தடை நீக்கம் - உச்சநீதிமன்றம்

தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமனத்திற்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விதித்த இடைக்கால தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

16 views

பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

38 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.