இடைத்தேர்தலை எதிர்நோக்கியுள்ள நாங்குநேரி தொகுதி : மக்களின் ஆதரவை திரட்டும் முயற்சியில் அரசியல் கட்சிகள்

இடைத்தேர்தலை எதிர்நோக்கியுள்ள நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதியில் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மக்களின் ஆதரவை திரட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இடைத்தேர்தலை எதிர்நோக்கியுள்ள நாங்குநேரி தொகுதி : மக்களின் ஆதரவை திரட்டும் முயற்சியில் அரசியல் கட்சிகள்
x
காங்கிரசை சேர்ந்த எச். வசந்தகுமார் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றதால்,  தமது நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.  பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதையடுத்து நாங்குநேரி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அங்கு இடைத்தேர்தல் எப்போது அறிவிக்கப்படும் என அரசியல் கட்சியினர் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். இந்நிலையில் நாங்குநேரி தொகுதியில் மக்களின் ஆதரவை திரட்டும் முயற்சியில் திமுகவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் குடிநீர் பிரச்சனை நிலவி வருவதால் பெண்கள் காலி குடங்களுடன் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.பச்சையாறு , கொடுமுடியாறு வறண்டு 10 நாட்களுக்கு ஒருமுறை குடிதண்ணீர் வருவதால் நாங்குநேரி பகுதி மக்கள் சிரமபட்டு வருகின்றனர்.இதனை கவனத்தில் கொண்டு திமுகவினர் களக்காடு, நாங்குநேரி, மற்றும் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியங்களுக்கு தலா ஒரு தண்ணீர் லாரி  வாங்கி தண்ணீர் விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதேபோல நாங்குநேரி தொகுதியில் அதிமுகவினரும் களத்தில் இறங்கியுள்ளனர்.இரண்டு கட்சிகளை சேர்ந்த  நிர்வாகிகளும் மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்