"அதிமுக ஆட்சி வரும் 23ஆம் தேதியோடு இல்லாமல் போய்விடும்" - ராஜகண்ணப்பன்

அதிமுக ஆட்சி வரும் 23ஆம் தேதியோடு இல்லாமல் போய்விடும் என்று முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சி வரும் 23ஆம் தேதியோடு இல்லாமல் போய்விடும் - ராஜகண்ணப்பன்
x
அதிமுக ஆட்சி வரும் 23ஆம் தேதியோடு இல்லாமல் போய்விடும் என்று முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். மதுரை தொகுதி திமுக கூட்டணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டபோது ராஜகண்ணப்பன் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பாஜகவிடம் தற்போது இருக்கும் ஆட்சியாளர்கள் அடிபணிந்து விட்டதாகவும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவால் கட்டி காக்கப்பட்ட இயக்கம் தற்போது ஊழல், லஞ்சம் நிரம்பிய ஒன்றாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்