தொண்டரின் குழந்தைக்கு பெயர் வைத்த கமல்...

மயிலாடுதுறையில் பிரச்சாரத்திற்கு வந்த கமலஹாசன், கட்சித் தொண்டரின் குழந்தைக்கு பெயர் சூட்டினார்.
தொண்டரின் குழந்தைக்கு பெயர் வைத்த கமல்...
x
மயிலாடுதுறையில் பிரச்சாரத்திற்கு வந்த கமலஹாசன், கட்சித் தொண்டரின் குழந்தைக்கு பெயர் சூட்டினார். வேட்பாளர் ரியாபூதீனை ஆதரித்து அவர் பிரச்சாரம் மேற்கொண்டபோது, கமலின் ரசிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டருமான ஒருவர் தமது குழந்தையை கொடுத்து பெயர்வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். உடனடியாக வேனை விட்டு இறங்கிய கமல், குழந்தைக்கு, 'ஆராதனா' என்று பெயரிட்டார். பெயர் சூட்டு நிகழ்ச்சிக்கு மொய் கொடுத்தால், வாக்குக்கு பணம் கொடுத்துவிட்டதாக தேர்தல் ஆணையம் நினைத்துவிடும் என்பதால், அன்பை மட்டும் மொய்யாக கொடுப்பதாக கமல் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்