திருமணம் செய்துக்கொள்ளவதாக கூறி ஆணை ஏமாற்றிய ஆண் : செயலிகளை பயன்படுத்தி பெண் போல் பேசி ஏமாற்றிய நபர்

ஆன்லைன் மேட்ரிமோனியல் மூலம் அறிமுகமாகி பெண் போல் பேசி மோசடி செய்த நபரை, பிடித்து கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
திருமணம் செய்துக்கொள்ளவதாக கூறி ஆணை ஏமாற்றிய ஆண் : செயலிகளை பயன்படுத்தி பெண் போல் பேசி ஏமாற்றிய நபர்
x
சென்னை வடபழனியை சேர்ந்த ஆனந்த் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணத்துக்கு பெண் தேடி ஆன்லைன் மேட்ரிமோனியில் பதிவு செய்துள்ளார். அப்போது கோயம்புத்தூரை சேர்ந்த ஹரிணி என்ற பெண் ஆனந்துடன் அறிமுகமாகி திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இதனயிடையே குடும்ப பிரச்சனைகளை கூறி பணம் கேட்க, ஹரிணியின் வங்கி கணக்குக்கு 70 ஆயிரம் ரூபாய் அனுப்பியுள்ளார். இதனையடுத்து ஹரிணி தொடர்புகொள்ளாததால், தான் ஏமாற்றப்பட்டத்தை உணர்ந்த ஆனந்த் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில் ஆனந்தை மீண்டும் தொடர்புகொண்ட ஹரிணி பண உதவியை கோரியுள்ளார். இம்முறை நேரில் வந்து வாங்கிகொள்ளுமாறு கூறிய ஆனந்திடம், தன் சித்தப்பாவை அனுப்புவதாக கூறியுள்ளார். பணம் வாங்க வந்தவரை பிடித்து வடபழனி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். போலீசார் விசாரணையில், பிடிபட்ட நபர் பெரம்பூரை சேர்ந்த செந்தில் என்று தெரியவந்தது. செல்போன் செயலிகளை பயன்படுத்தி பெண் குரலில் ஆண்களிடம் பேசி பண மோசடியில் ஈடுப்பட்டதை செந்தில் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து ஆனந்திடம் ஏமாற்றிய பணத்தை பெற்றுதந்த போலீசார், பிடிபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்காமல் விடுவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த ஆனந்த் செய்வதறியாது வேதனை தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்