கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை : தனியார் விடுதி உரிமையாளர்கள் மீது குற்றச்சாட்டு
பதிவு : மார்ச் 13, 2019, 08:03 AM
தனியார் விடுதி உரிமையாளர்கள், கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சட்டக்கல்லூரி மாணவி புகார் தெரிவித்துள்ள சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, பூந்தமல்லி பேருந்து நிலையம் எதிரே, செயல்பட்டு வரும் தனியார் பெண்கள் விடுதியை தாமஸ் மற்றும் ஆறுமுகம் ஆகியோர் நடத்தி வருகின்றனர்.  இந்த நிலையில் தாமஸ் மற்றும் ஆறுமுகம், வெளியாட்களை விடுதிக்கு அழைத்து வந்து மது அருந்துவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளதாக மானாமதுரையை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி   புகார் கூறியுள்ளார். மேலும் அவர்கள் தனது நண்பர்களுடன் சேர்ந்து விடுதியில் தங்கி இருக்கும் பெண்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த நிலையில், தாமஸ் மற்றும் ஆறுமுகம் ஆகியோர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் காட்சியை  சட்டக்கல்லூரி மாணவி செல்போனில் படம் பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த விடுதி உரிமையாளர்கள்,  கண்மூடித்தனமாக தாக்கியதால் படுகாயம் அடைந்த அந்த  மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

436 views

பிற செய்திகள்

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி

மாநில அளவிலான கைப்பந்து போட்டி கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் நடைபெற்றது.

22 views

புராதன தர்மராஜா கோயில் தீமிதித்திருவிழா - 20 ஆயிரம் பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன்

திருத்தணியில் புராதன தர்மராஜா கோயிலில் நடைபெற்ற தீமிதித்திருவிழாவில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

19 views

சமயபுரத்தில் 14ஆம் நாள் பஞ்சபிரகார திருவிழா - வெள்ளி குதிரை வாகனத்தில்அம்மன் வீதி உலா

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில், பஞ்ச பிரகார விழா நடைபெற்றது.

7 views

குடும்ப பிரச்சினை : மனைவியை அடித்துக்கொன்ற கணவர் கைது...

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக, மனைவியை அடித்துக் கொன்ற கணவன், கைது செய்யப்பட்டார்.

63 views

பாசி நிதி நிறுவன மோசடி வழக்கு : விசாரணையை முடிக்க பாதிக்கப்பட்டோர் கோரிக்கை...

பாசி நிதி நிறுவன மோசடி வழக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பாதிக்கப்பட்டோர் வலியுறுத்தி உள்ளனர்.

38 views

கோயில் திருவிழாவை முன்னிட்டு பாய்மர படகுப் போட்டி...

திருவாடானை பகுதியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு பாய்மர படகுப் போட்டி நடைபெற்றது.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.