இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்

தமிழகம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்
x
தமிழகம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. 

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பி​ல், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என 43 ஆயிரத்து 51 மையங்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்