ஆட்டம், பாட்டத்துடன் நடந்த சமத்துவ பொங்கல்...

கோவை அவிநாசி சாலை அருகே தனியார் கல்லூரியில் ஆட்டம் பாட்டத்துடன் கல்லூரி மாணவ, மாணவிகள், சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.
ஆட்டம், பாட்டத்துடன் நடந்த சமத்துவ பொங்கல்...
x
கோவை அவிநாசி சாலை அருகே தனியார் கல்லூரியில்  ஆட்டம் பாட்டத்துடன் கல்லூரி மாணவ, மாணவிகள், சமத்துவ பொங்கல் கொண்டாடினர். பாரம்பரிய முறைப்படி மயிலாட்டம் ஒயிலாட்டம், சிலம்பாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் என கல்லூரியே திருவிழாக்கோலமாக காட்சியளித்த‌து. 

அரசு துறைகள் சார்பில் சுகாதார பொங்கல் விழா



காஞ்சிபுரத்தில் மாவட்ட  மாவட்ட ஆட்சியர் பொன்னையா தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள், பாரம்பரிய முறைப்படி வேட்டி, சேலை அணிந்து பொங்கல் விழாவில் பங்கேற்றனர். காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமணி, சார் ஆட்சியர் சரவண‌ன் உள்ளிட்டோரும் விழாவில் கலந்துகொண்டனர்.

அரசு கல்லூரியில் பொங்கல் விழா : பாரம்பரிய உடைகள் அணிந்து மாணவ, மாணவிகள் உற்சாகம்



கரூர் அரசு கலைக் கல்லூரியில் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் வைத்தனர். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசுகையில், மாணவர்கள் முன்னேற்றப் பாதையை நோக்கி மட்டுமே சிந்திக்க வேண்டும் என்றார். மாணவிகள் கலர் கலராக உடை அணிந்து கொண்டாலும் நமது நிறமும், மனமும் எப்போதும் மாறக் கூடாது என்றார்.


Next Story

மேலும் செய்திகள்