மணல் அள்ள ஆற்றில் இருந்த மரங்கள் அகற்றப்பட்டதா? - அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

வேலூர் மாவட்டத்தில் பாலாறு நதியில் மணல் எடுப்பதற்காக, மரங்கள் அகற்றப்பட்டதற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஜனவரி 22-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மணல் அள்ள ஆற்றில் இருந்த மரங்கள் அகற்றப்பட்டதா? - அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
x
வேலூர் மாவட்டத்தில் பாலாறு நதியில் மணல் எடுப்பதற்காக,  மரங்கள் அகற்றப்பட்டதற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஜனவரி 22-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பேர்ணாம்பட்டுவை சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனு, நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பட்டு கிராமத்தில்  பாலாறு நதியில்  மணல் அள்ள வசதியாக மரங்கள் அகற்றப்பட்டதாகவும், எனவே மணல் அள்ளுவதற்கான அனுமதியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிட்டப்பட்டது. இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அரசு தரப்பில் கால அவகாசம் கோரியதையடுத்து விசாரணையை ஜனவரி 22-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்

Next Story

மேலும் செய்திகள்