"நிலத்தடி நீர் மாசு பற்றி ஸ்டெர்லைட் கவலைப்படவில்லை" - தமிழக அரசு

தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மோசமான நிலைமைக்கு செல்வது பற்றி ஸ்டெர்லைட் கவலைப்படவில்லை என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நிலத்தடி நீர் மாசு பற்றி ஸ்டெர்லைட் கவலைப்படவில்லை - தமிழக அரசு
x
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக வேதாந்தா குழுமம் தொடர்ந்த வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மோசமான நிலைமைக்கு செல்வது பற்றி ஸ்டெர்லைட் கவலைப்படவில்லை என்றும், இதனால் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தலையிட்டதாகவும், தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

நிலத்தடி நீர் நிலை குறித்து 2014 முதல் 2018-ம் ஆண்டு வரை ஆலைக்கு நோட்டீஸ் ஏதேனும் அனுப்பப்பட்டதா? என, அப்போது தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது. இதற்கு, நோட்டீஸ் எதுவும் அனுப்பப்படவில்லை என்றும், அதிகாரிகள் இன்னும் விழிப்புடன் இருந்து முன்னதாகவே தலையிட்டிருக்க வேண்டும் என தமிழக அரசு கூறியது.

இந்தியா தொழிற்சாலை இல்லாத நாடாகிவிடும் என விசாரணையின் போது தீர்ப்பாயம் கூறிய போது, மாசு ஏற்படுத்துவோர், அதற்கான விலையை கொடுத்தே ஆகவேண்டும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. முழுமையான மதிப்பீட்டுக்கு பிறகே, ஸ்டெர்லைட் ஆலை இயங்க தடை விதிக்கப்பட்டதாகவும், ஆனால் அதை அவர்கள் மீறியதால் மின் இணைப்பை துண்டித்து, ஆலையை மூட உத்தரவிடப்பட்டதாக கூறி, தமிழக அரசு தனது தரப்பு வாதத்தை நிறைவு செய்தது. 

Next Story

மேலும் செய்திகள்