ஸ்டெர்லைட் வழக்கு : டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று தீர்ப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
ஸ்டெர்லைட் வழக்கு : டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று தீர்ப்பு
x
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் இறந்ததை அடுத்து, தமிழக அரசு கடந்த மே மாதம் 28ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடி சீல் வைத்தது. இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம், டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த, பசுமை தீர்ப்பாயம், நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைத்து, ஸ்டெர்லைட் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்த உத்தரவிட்டது. ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வு நடத்திய மூவர் குழு, அறிக்கையை தனித்தனியாக மூடி முத்திரையிடப்பட்ட 48 உறைகளில் வைத்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்தது. இந்நிலையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது. 


Next Story

மேலும் செய்திகள்