கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக கூரை அமைக்க 6 லட்சத்து 48 ஆயிரம் தார்பாய் தேவை

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக கூரை அமைக்க 6 லட்சத்து 48 ஆயிரம் தார்பாய் தேவைப்படுவதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தெரிவித்துள்ளது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக கூரை அமைக்க 6 லட்சத்து 48 ஆயிரம் தார்பாய் தேவை
x
* கஜா புயலால் வீடுகளை இழந்த மக்களுக்கு தற்காலிக கூரை அமைக்க தார்பாய் வழங்குமாறு முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், தார்பாய் உற்பத்தியாளர்களுக்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

* அதில், புயலால் பாதித்த பகுதிகளில் தற்காலிக கூரை அமைக்க 6 லட்சத்து 48 ஆயிரம் தார்பாய்கள் தேவைப்படுகிறது என கூறப்பட்டுள்ளது. 

* 24 அடி நீளம், 18 அடி அகலம் மற்றும் 4 புள்ளி 8 கிலோவுக்கு குறைவாக இல்லாமலும் 130 மைக்ரான் அளவு தடிமன் கொண்டதாகவும் தார்பாய் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

* தஞ்சை மாவட்டத்துக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம்,  திருவாரூருக்கு ஒரு லட்சத்து 98 ஆயிரம், நாகைக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம், புதுக்கோட்டைக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் என தார்பாய் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

* தகுதி வாய்ந்த உற்பத்தியாளர்களிடம் இருந்து அவற்றை கொள்முதல் செய்து நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க உள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்