"சோபியாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்" - கைதான சோபியாவின் தந்தை போலீஸில் புகார்

பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை மற்றும் பா.ஜ.க.வினர் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, கைதான சோபியாவின் தந்தை சாமி, போலீஸில் புகார் அளித்துள்ளார்.
சோபியாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர் - கைதான சோபியாவின் தந்தை போலீஸில் புகார்
x
பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை மற்றும் பா.ஜ.க.வினர் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, கைதான சோபியாவின் தந்தை சாமி, போலீஸில் புகார் அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் அவர் அளித்துள்ள புகார் மனுவில், தமிழிசை பா.ஜ.க. தொண்டர்களை தூண்டி விட்டு தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறியுள்ளார். 

அப்போது அவர்கள் தகாத வார்த்தைகளால் தங்களை திட்டியதாகவும், தனது மகளையும், மனைவியையும் சட்டத்துக்குப் புறம்பாக அவர்கள் புகைப்படம் எடுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தங்களுக்கு உயிர் பயத்தை ஏற்படுத்திய தமிழிசை உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் சோபியாவின் தந்தை கூறியுள்ளார்.



தமிழிசையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சோபியா யார்?

தூத்துக்குடி மாவட்டம் மூன்றாம் மைல் பகுதியைச் சேர்ந்த சாமி - மனோகரி தம்பதியின் மகள் சோபியா, மகன் கிங்ஸ்டன். சாமி, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தாய் மனோகரி, தலைமை செவிலியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 

கிங்ஸ்டன், தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில்,  பள்ளிப் படிப்பை தூத்துக்குடியில் முடித்த சோபியா, ஜெர்மனியில் M.Sc இயற்பியலும், கனடாவில் M.Sc கணிதமும் முடித்து விட்டு, தற்போது அங்குள்ள மான்ட்ரியல் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார். 

இணைய தளங்களில் சமூக கருத்துகளை தொடர்ந்து பதிவிட்டு வந்த அவர், சமீபத்தில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாகவும்  பல்வேறு கருத்துக்களை பதிவிட்டார். இந்நிலையில், விமானத்தில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசையை பார்த்தபோது, பாஜக அரசுக்கு எதிரான கருத்துக்களை நேரடியாக தெரிவித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கைதாகியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்