2 வது ஒரு நாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து வெற்றி - ஜோப்ரா ஆர்ச்சர் ஆட்டநாயகனாக தேர்வு

இங்கிலாந்து ஆஸ்திரேலியா இடையிலான 2 வது ஒரு நாள் கிரிக்கெட்டில் 24 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
2 வது ஒரு நாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து வெற்றி - ஜோப்ரா ஆர்ச்சர் ஆட்டநாயகனாக தேர்வு
x
ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.  20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா இழந்த நிலையில்,  அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வென்ற நிலையில், 2 வது போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது.  சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. ஜோ ரூட் 39 ரன்களும், இயான் மோர்கன் 42 ரன்களும் எடுத்தனர்.  50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து 231 ரன்கள் எடுத்தது.  ஆஸ்திரேலியா சார்பில் சம்பா 3 விக்கெட், ஸ்டார்க் 2 விக்கெட் வீழ்த்தினர்.


Next Story

மேலும் செய்திகள்