ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் காங்., பாஜக நேரடி மோதலால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது

ஹரியானா சட்டமன்ற தேர்தலில் பிரசாரம் செய்யும், பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களின் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில்  காங்., பாஜக நேரடி மோதலால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது
x
மொத்தம் 90 தொகுதிகள் உள்ள ஹரியானா மாநிலத்தில் வரும் 21ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தற்போது, அங்கு ஆட்சியில் உள்ள பாஜக ஆட்சியை தக்க வைக்கவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும் தீவிரமாக களமிறங்கி உள்ளன. இரு தேசியக் கட்சிகளும் நேரடி மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா உட்பட 40 பேர் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். 40 பேரின் பெயர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில் பாஜக செயல் தலைவர் ஜேபி நட்டா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஹேமமாலினி, உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்