டெல்லி - காஷ்மீர் வந்தே பாரத் விரைவு ரயில் சேவை - உள்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்

டெல்லியில் இருந்து ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் உள்ள வைஷ்னோ தேவி கோவில் உள்ள கட்ரா வரை வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.
டெல்லி - காஷ்மீர் வந்தே பாரத் விரைவு ரயில் சேவை - உள்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்
x
வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் 40 வந்தே பாரத் விரைவு ரயில்களை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக டெல்லியில் இருந்து ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கட்ரா வரை இயக்கப்பட உள்ள வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள் பியூஷ்கோயல், ஜிதேந்திர சிங் மற்றும் ஹர்​சவர்த்தன் ஆகியோரும் பங்கேற்றனர். இந்த ரயில் செவ்வாய்கிழமை தவிர வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்பட உள்ளது. காலை 6 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு கட்ரா சென்று அடையும். குறைந்த பட்ச கட்டணம் ஆயிரத்து 630 ஆகவும், அதிகப்பட்ச கட்டணம் மூவாயிரத்து 15 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விழாவில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அரசியல் சட்டப்பிரிவு 370- ஐ நீக்கும் முன்பு அம்மாநில வளர்ச்சிக்கு பல தடைகள் இருந்தது என தெரிவித்தார். அடுத்த 10 ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் ஒன்றாக ஜம்மு, காஷ்மீர் இருக்கும் என்றும், அதன் தொடக்கமாக வந்தே பாரத் விரைவு ரயில் சேவை இருக்கும் என்றும் அமித்ஷா தெரிவித்தார். ஜம்மு, காஷ்மீருக்கு அதிகப்படியான சுற்றுலாப் பயணிகளை இந்த ரயில் ஈர்க்கும் என்றும் அமித்ஷா தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்