புதுச்சேரியில் பாஜக தனித்து போட்டி இல்லை : "என்.ஆர்.காங்கிரசுக்கு ஆதரவு" - புதுச்சேரி பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

புதுச்சேரியில், பாஜக தனித்து போட்டியிடும் முடிவை, கடைசி நிமிடத்தில் கைவிட்டது.
புதுச்சேரியில் பாஜக தனித்து போட்டி இல்லை : என்.ஆர்.காங்கிரசுக்கு ஆதரவு - புதுச்சேரி பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு
x
புதுச்சேரியில், பாஜக தனித்து போட்டியிடும் முடிவை, கடைசி நிமிடத்தில் கைவிட்டது. புதுச்சேரி - காமராஜ் நகர் தொகுதியில் வருகிற 21 ம் தேதி, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இத்தேர்தலில் போட்டியிட
முடிவு செய்த பாஜக, வேட்பாளர் நேர்காணல் நடத்தியது. இந்த சூழலில், புதுச்சேரி பாஜக தலைவர் சுவாமிநாதனும், என் ஆர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் என், ஆர் பாலனும் சந்தித்து பேச்சு நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டின்படி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் என் ஆர் காங்கிரஸ் வேட்பாளருக்கு, பாஜக ஆதரவு தருவது என முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இன்று நண்பகலில் வெளியிடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்