அதிகாரிகளை கீழ்த்தரமான வார்த்தையால் திட்டிய பா.ஜ.க. எம்.பி.

தசரா திருவிழா மைசூருவில் நாளை தொடங்கி அக்டோபர் எட்டாம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகளை மைசூரு நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாப் சிம்ஹா நேரில் பார்வையிட்டார்.
அதிகாரிகளை கீழ்த்தரமான வார்த்தையால் திட்டிய பா.ஜ.க. எம்.பி.
x
தசரா திருவிழா மைசூருவில் நாளை தொடங்கி அக்டோபர்  எட்டாம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், இதற்கான  ஏற்பாடுகளை மைசூரு நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாப் சிம்ஹா நேரில் பார்வையிட்டார். மைசூருவில் தசரா விழாவை முன்னிட்டு  மகிஷா தசரா என்ற விழாவுக்கும் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. இதனைப் பார்த்த பா.ஜ.க. எம்.பி. விழாவை  நிறுத்தும்படி விழா ஏற்பாட்டாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அங்கிருந்த நகராட்சி அதிகாரிகளையும், காவல்துறை அதிகாரிகளையும் கீழ்த்தரமான வார்த்தைகளார் திட்டியது பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.கடந்த ஆறு வருடங்களாக காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் காங்கிரஸ் கூட்டணி அரசின் போதும் மகிஷா தசராவை குறிப்பிட்ட சமூகத்தினர் தொடர்ந்து கொண்டாடி வந்தனர். தற்போது பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் பா.ஜ.க. எம்.பி. நடந்து கொண்ட விதம் மைசூருவில் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்