"காஷ்மீர் விவகாரத்தில் ஒப்பாரி வைப்பது ஏன்?" - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேள்வி

"காஷ்மீர் விவகாரத்தில் ஒப்பாரி வைப்பது ஏன்?" - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேள்வி
காஷ்மீர் விவகாரத்தில் ஒப்பாரி வைப்பது ஏன்? - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேள்வி
x
லடாக் பிராந்தியத்தில் உள்ள லேவில் ராணுவ கண்காட்சியை தொடங்கி வைத்து பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை நீக்கும் இந்தியாவின் முடிவுக்கு எதிராக, சர்வதேச சமூகத்தை ஒன்று திரட்டும் பணியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்து உள்ளதாக தெரிவித்தார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்ஜித் பாகிஸ்தானை ஆக்கிரமித்து வைத்துக் கொண்டு, காஷ்மீர் மீது உரிமை இல்லாத பாகிஸ்தான் ஒப்பாரி வைப்பது ஏன் என்றும் ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பி உள்ளார். காஷ்மீர் எப்போதுமே இந்தியாவின் ஒருபகுதி என்றும், அதை என்றைக்குமே பாகிஸ்தான் உரிமை கொண்டாட முடியாது என்றும் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்