கர்நாடகாவில் நாளை மறுநாள் அமைச்சரவை விரிவாக்கம்? - முதலில் 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என தகவல்

கர்நாடகாவில் முதலமைச்சர் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவை வரும் செவ்வாய்கிழமை விரிவாக்கம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவில்  நாளை மறுநாள் அமைச்சரவை விரிவாக்கம்? - முதலில் 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என தகவல்
x
கர்நாடகாவில் முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்ற நிலையில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமல் உள்ளது. இதற்கு பாஜக மேலிடத்திலிருந்து ஒப்புதல் கிடைக்கவில்லை என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற எடியூரப்பா கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து கர்நாடகாவில் முதலமைச்சர் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவை வரும் செவ்வாய்கிழமை விரிவாக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 33 பேர் கொண்ட அமைச்சரவையில் முதல் கட்டமாக 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என்று தெரிகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், அசோக், மாதுசாமி, ஈஸ்வரப்பா பசவராஜ் பொம்மை, உமேஷ் கத்தி, ஸ்ரீராமுலு உள்ளிட்டோர் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என கூறப்படுகிறது. கர்நாடகாவில் அமைச்சர்கள் யாரும் இல்லாததால் முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில் நடைபெற்ற 3 அமைச்சரவை கூட்டங்களிலும், தலைமை செயலாளர் மற்றும் அதிகாரிகள் மட்டுமே பங்கேற்றனர். இதனால் மழைவெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்