நிர்வாகிகள் உள்பட 350 பேர் நீக்கப்பட்ட விவகாரம் : அ.தி.மு.க அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

தென் சென்னை அதிமுக வடக்கு மாவட்டத்தில் நிர்வாகிகள் உள்பட 350 பேர் நீக்கப்பட்டதை கண்டித்து, சென்னையில் அந்த கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிர்வாகிகள் உள்பட 350 பேர் நீக்கப்பட்ட விவகாரம் : அ.தி.மு.க அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
x
தென் சென்னை அதிமுக வடக்கு மாவட்டத்தில் நிர்வாகிகள் உள்பட 350 பேர் நீக்கப்பட்டதை கண்டித்து, சென்னையில் அந்த கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவ்வைசண்முகம் சாலையில் திரண்ட அவர்கள், பேரணியாக சென்று அ.தி.மு.க தலைமை அலுவலகம் முன் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். தியாகராயநகரின் எம்.எல்.ஏவும் மாவட்ட செயலாளருமான சத்யநாராயணனை நீக்கக் கோரி அவர்கள் கோஷம் எழுப்பினர்.  தி.மு.கவுக்கு எதிராக செயல்படக் கூடாது என கட்சியில் இருந்து நீக்கிவிட்டதாக எம்.எல்.ஏ மீது கட்சி தொண்டர்கள் புகார் தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்