நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா : மாநிலங்களவையில் டி.ராஜா கேள்வி

நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழக அரசு நிறைவேற்றி உள்ள மசோதாவுக்கு ஏன் விலக்கு அளிக்கக் கூடாது ? இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. டி.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா : மாநிலங்களவையில் டி.ராஜா கேள்வி
x
நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழக அரசு நிறைவேற்றி உள்ள மசோதாவுக்கு ஏன் விலக்கு அளிக்கக் கூடாது ? இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. டி.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய அவர், நீட் தேர்வினால் தமிழகத்தில் பல குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவித்தார். மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக புதிய கல்விக் கொள்கை வரைவு திட்டத்தை கொண்டு வந்துள்ளது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என அவர் குறிப்பிட்டார். சுகன்யா திட்டம் மூலம் விண்ணுக்கு மனிதனை அனுப்பப் போவதாக பிரிவுத் தலைவர் உரையில் போடப்பட்டுள்ளது ஆனால் இன்னமும் நமது நாட்டில் மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளக்கூடிய அவலநிலை நிலவுகிறது இது தான் புதிய இந்தியாவா ? என்றும் டி.ராஜா வினவியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்