தேசிய அந்தஸ்தை இழக்கும் இடதுசாரிகள்

நாட்டின் மிக பழமையான கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் தேசிய கட்சி அந்தஸ்த்தை இழக்கும் நிலை உருவாகியுள்ளது.
தேசிய அந்தஸ்தை இழக்கும் இடதுசாரிகள்
x
ஒரு கட்சி தேசிய கட்சி என்ற அந்தஸ்து பெறுவதற்கு குறைந்தது 3 மாநிலங்களில் இருந்து 11 மக்களவை தொகுதிகளில் வென்றிருக்க வேண்டும். அல்லது 4 மாநிலங்களில் 6 சதவிகித வாக்குகள் பெற்று, 4 மக்களவை தொகுதிகளில் வென்றிருக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் 4 மாநிலங்களில் மாநில கட்சி அந்தஸ்த்தை பெற்றிருக்க வேண்டும்.
இந்த நிலையில் தேசிய கட்சி என்ற அந்தஸ்த்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நடந்த முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய கோட்டைகளான மேற்குவங்கம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் ஒரு தொகுதியை கூட வெல்ல முடியவில்லை. தமிழகத்தில் 2 தொகுதிகள் மற்றும் கேரளாவில் ஒரு தொகுதி என வெறும் மூன்றே தொகுதிகளை மட்டுமே பெற்றுள்ளன . ஏற்கனவே 2014ஆம் ஆண்டு தேர்தலில் தேசிய கட்சி அந்தஸ்த்தை இழக்க வேண்டிய அபாயத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த சூழல் ஏற்பட்டுள்ளது. அதே போல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழகத்தின் 2 தொகுதிகளை மட்டுமே பெற்றுள்ளது . இதனால் அக்கட்சிக்கும் தேசிய கட்சி அந்தஸ்து பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்